உணவு, குளிர்பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகளால் புற்றுநோய் அபாயம்; உலக சுகாதார அமைப்பு பகீர் எச்சரிக்கை.!
உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு நபரின் உடல் எடையில் ஒரு கிலோகிராமுக்கு 40 மில்லிகிராம் என்ற தினசரி வரம்பிற்குள் உட்கொள்வது பாதுகாப்பானது என அஸ்பார்டேமை வகைப்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் உணவு மற்றும் வேளாண்மை குழு சர்வதேச அளவிலான உணவு சேர்க்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, குளிர்பானம் உட்பட உணவு பொருட்களில் சர்க்கரை அல்லாத இனிப்பு அஸ்பார்டேமின் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு, அவை மனிதர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது.
Aspartame என்பது சுக்ரோஸை விட 200 மடங்கு இனிப்பான ஒரு செயற்கை சர்க்கரை ஆகும். இது இனிப்பு மற்றும் பொதுவாக உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரை மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை மனித உயிர்களுக்கு எதிர்கால தீங்குகளை ஏற்படுத்தவல்லது ஆகும்.
இந்த அஸ்பார்டேமை மனிதர்களுக்கு தினசரி 40 mg/kg அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு நிறுவனம், நாம் சாப்பிடும் உணவுகளில் அவைகளின் சேர்மானங்களை கணக்கில் எடுத்து நாம் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஊட்டச்சத்து, உணவுப்பாதுகாப்புத்துறை இயக்குனர் மருத்துவர் பிரான்செஸ்கோ பிரான்கா என்பவர் தெரிவிக்கையில், "அஸ்பார்டேமின் மதிப்பீடுகள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அளவுகளில் பாதுகாப்பு ஒரு பெரிய கவலை இல்லை என்றாலும், சாத்தியமான விளைவுகள் விவரிக்கப்பட்டுள்ளன, அவை ஆராயப்பட வேண்டும்.
மேலும், சிறந்த ஆய்வுகள் மூலம் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று புற்றுநோயாகும். ஒவ்வொரு ஆண்டும் 6 பேரில் 1 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். விஞ்ஞானம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. எதிர்காலத்தில் அனைத்தும் சரி செய்யப்படலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.