திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
108 கிலோவில் இருந்து 50 கிலோவாக குறைந்த இளம் பெண் .! மிஸ் பிரிட்டன் பட்டத்தை வென்று சாதனை.!
உடல் பருமன் காரணமாக காதலனால் கழட்டிவிடப்பட்ட பெண் ஒருவர் உடல் எடையை குறைத்ததோடு மிஸ் பிரிட்டன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த jenatkinuk என்னும் இளம் பெண்ணை அவரது காதலர் குண்டாக இருப்பதாக கூறி அவரை நிராகரித்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண் மேலும் அதிகமான உணவுகளை சாப்பிட்டதால் இவரது உடல் பருமன் இன்னும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நண்பர்கள் வழங்கிய அறிவுரை, ஊக்கத்தால் உடல் எடையை குறைக்க முடிவு செய்த அவர் 2 வருட போராட்டத்திற்கு பிறகு 108 கிலோவில் இருந்து 50 கிலோவாக குறைந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல், பிரிட்டனில் நடந்த மிஸ் பிரிட்டன் அழகி போட்டியில் கலந்துகொண்ட அவர் மிஸ் பிரிட்டன் டைட்டில் பட்டத்தையும் வென்றுள்ளார்.
இதுபற்றி கூறிய அந்த பெண், தனது காதல் நிறைவேறாமல் போனது ஒருவிதத்தில் நல்லதுதான் என்றும், வெளிப்புற அழகை விட ஒருவரின் மனமும் ஆளுமையும்தான் எப்போதும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.