மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
37,000 அடி உயரம்.! விமான கதவை திறந்து குதிக்க முயன்ற பெண்! கூறிய காரணத்தால் ஷாக்கான அதிகாரிகள்!!
டெக்ஸாஸில் இருந்து கொலம்பஸ் பகுதிக்கு பறந்த சவுத் வெஸ்ட் 192 என்ற விமானத்தில் 34 வயது நிறைந்த எலோம் அக்பெக்னினோ என்ற பெண் பயணம் செய்துள்ளார். விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, தனது சீட்டில் அமர்ந்திருந்த அவர் திடீரென எழுந்து விமானத்தின் பின்பக்க கதவு அருகே சென்று வெளியே வெறித்து பார்த்துகொண்டு இருந்துள்ளார்.
அவரைக் கண்ட விமான பணிப்பெண் அவரை இருக்கையில் சென்று அமருமாறு கூறியுள்ளார். ஆனால் அந்தப் பணிப்பெண் சொல்வதை சிறிதும் பொருட்படுத்தாத எலோம் கதவையே பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் திடீரென அவர் விமான கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். உடனே விமான ஊழியர் மற்றும் பயணி ஒருவர் அவர் கதவை திறப்பதை தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த எலோம் தன்னை தடுத்த நபரின் தொடையில் பலமுறை கடித்துள்ளார். இந்த நிலையில் விமானம் அவசர அவசரமாக ஆர்கன்சாஸில் உள்ள பில் அண்ட் ஹிலாரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர் எலோம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின் அறிக்கையில், விமானத்தில் கதவை திறக்க முயற்சித்த போது எலோம், ஜீசஸ் என்னை ஓஹியோவிற்கு அழைக்கிறார். ஜீசஸ் என்னை கதவு திறக்க சொன்னார் என கூறிக்கொண்டு தலையில் முட்டிக்கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் போதகர் ஒருவரை சந்திக்க மேரிலாந்திற்கு செல்வதாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.