96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இப்படிக்கூட ஒருத்தருக்கு குழந்தை பிறக்குமா!! மருத்துவர்களே ஆச்சரியத்தில் உள்ளனர்..!! எப்படி அந்த விஷயம் தெரியாம போச்சு..?
வயிற்றுவலி என நினைத்து கழிவறைக்குள் சென்ற பெண்ணிற்கு குழந்தை பிறந்த சம்பவம் அந்த பெண் உட்பட பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், பொதுவாக ஒரு பெண் கர்ப்பம் தருகிறார் என்றாலே அடுத்து குழந்தை பிறகும்வரை அவர் ஏகப்பட்ட கஷ்டங்கள், சிரமங்கள், உடல் உபாதைகள், வாந்தி, மயக்கம் இப்படி ஏகப்பட்ட சிரமங்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் குழந்தை பெற்றெடுத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அப்படி ஒரு சம்பவம் உண்மையிலையே அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் பகுதியில் நடந்துள்ளது. இந்த பகுதியில் வசித்துவரும் மெலிசா சர்ஜ்காஃப் என்ற பெண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்தபோது கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன அவரது கணவர் உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் ஏதோ ஒன்று தனது வயிற்றில் இருந்து வெளியே வருவதை உணர்ந்து கழிவறைக்குள் சென்றுள்ளார். முதலில் தனது உடலில் இருக்கும் ஏதோ ஒரு உறுப்புதான் வெளியே வரப்போகிறது, அல்லது சிறுநீரக கல் ஏதேனும் வெளியே வரபோகிறது என நினைத்து வலியுடன் கழிவறைக்குள் காத்திருந்துள்ளார்.
அப்போதுதான் இரத்தம் படிந்த உடம்புடன் குழந்தை ஒன்று அவருக்கு பிறந்துள்ளது. குழந்தையை பார்த்ததும் அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. காரணம் அவர் கர்ப்பமாக இருப்பதோ, அவருக்கு குழந்தை பிறக்க போகிறது என்பது பற்றியோ எதுவும் தெரியாது.
பின்னர் குழந்தையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்த பெண். தற்போது அந்த பெண்ணும் அவரது குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், அந்த பெண்ணிற்கு 9 மாதங்களிலையே குழந்தை பிறந்துவிட்டது. இதனால் அவரது வயிறு பெரிதாகாமல் இருந்திருக்கலாம்.
அதேபோல் வயிற்றில் குழந்தை இருப்பதற்காக அறிகுறிகளை அவர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். அதனாலயே அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியவில்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிடாய் ஏற்படாது என்பது பொதுவான ஒன்று. ஆனால் சிலருக்கு கர்ப்பம் தரித்த பிறகும் லேசான ரத்தப்போக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது.
இது மிக மிக அரிது என்றாலும், இந்த பெண்ணிற்கும் அதுபோன்று சீரற்ற இரத்த போக்கு இருந்ததும் அவர் தனது கற்பதை உணராமல் இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.