1900கிமீ பயணம்; 8 வருடங்களுக்கு பின் தனது செல்லநாயுடன் இணைந்த பெண்! சுவாரஸ்ய நெகிழ்ச்சி சம்பவம்!!



women-joint-with-missing-dog-after-8-years

கடந்த 2013ம் ஆண்டில் அமெரிக்கா ப்ளோரிடாவில் பெட்ஸி டிஹான் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் பிட் புல் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அதற்கு ஹார்லி என்று பெயரிட்டு செல்லமாக கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் பெட்ஸி கடந்த 2014ம் ஆண்டு அந்த நாயை தவறவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து தனது நாய் ஹார்லியை காணவில்லை என போஸ்டர் ஒட்டுவது, விளம்பரம் கொடுப்பது என தீவிரமாக தேடியுள்ளார். ஆனால் நாய் ஹார்லி கிடைக்கவில்லை. இந்நிலையில் பெட்ஸி மிசூரி மாகாணத்துக்குக் குடிபெயர்ந்துள்ளார். பின் அவர் எந்த நாயையும் வளர்க்கவில்லை.

dog

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் Lee County Domestic Animal Servicesல் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பல நாட்கள் வெட்டப்படாமல் அதிக நீளமான நகங்களைக் கொண்டு பிட் புல் வகை நாய் ஒன்று தங்களிடம் கிடைத்துள்ளதாகவும், அதன் தோலிலிருந்த மைக்ரோசிப் மூலம் கிடைத்த தகவலால் அவர்கள் பெட்ஸிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு உற்சாகமடைந்த பெப்ஸி உடனே தனது காரில் ஃப்ளோரிடாவிற்கு சென்றுள்ளார்.

சுமார் 1900 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு அந்த பெண் ஹார்லியை கண்டறிந்து அதனுடன் இணைந்துள்ளார். 8 வருடங்களுக்குப் பிறகு தனது செல்லநாயுடன் இணைந்ததால் பெட்ஸி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.