இன்று பிரியாணிக்கு பிறந்தநாள்..! பிரியாணிக்கு பின்னால் இவ்வளவு இருக்கா.?!



world-biriyani-day

இன்று உலக பிரியாணி தினமாம்..

பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆறில் இருந்து அறுபது வரை பிரியாணி என்றாலே நாவை தட்டுபவர்கள் தான். இதில் யாரும் விதி விளக்கல்ல.

சண்டே என்றாலே பிரியாணி தான் என்பது மாறி, வாரம் முழுவதும் பிரியாணி என்றால் கூட சலிக்காமல் சாப்பிடுபவர்கள் தான் இங்கு அதிகம்.

மற்ற உணவுகளை கூட போதும் என்று கூறி எழுந்து விட முடிகிறது. ஆனால், இந்த பிரியாணியில் மட்டும் என்னதான் இருக்கிறதோ "அட அட"..! இப்படியான இந்த பிரியாணி எப்படி நமக்கு அறிமுகமானது என்று யாராவது கேட்டால் நமக்கு பதில் சொல்ல தெரியவேண்டும் அல்லவே?

 

Biriyaniபிரியாணி சொல்லானது உருது மொழியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரியாணியின் வரலாறு குறித்து ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதை தான்.

ஆனால் நமது இந்தியாவை பொறுத்தவரையில், பண்டைய கால மக்கள் அரிசி, நெய், மஞ்சள், மிளகு அதனுடன் இறைச்சியையும் இறைச்சியையும் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது ஊன்சோறு என்றழைக்கப்பட்டுள்ளது. இதுவே, நாளடைவில் பிரியாணியாக என்று மாறியதாக கூறப்படுகிறது.

மேலும் முகலாய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில்தான் இந்தியாவில் பிரியாணி உருவானதாகவும், குறிப்பிடும்படியாக போரின்போது மன்னர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் வருகை புரிந்து வீரர்களின் நிலையை கண்டு வருந்தி அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் அரிசியுடன் மசாலா, இறைச்சி கலந்த உணவை தயாரித்து கொடுத்ததுதான் பிரியாணியாக மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் என்னமோ வீட்டு பிரியாணிக்கு ருசி அதிகமோ?!