3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
இது கொஞ்சம் என்னனு பாருங்க சார்!! கிணறு தோண்டும்போது உரிமையாளருக்கு கிடைத்த ஆச்சரியம்!!
உலகத்துலயே மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் ஒன்று இலங்கையில் ஒருவரின் வீட்டில் கிணறு தோண்டும்போது கிடைத்துள்ளது.
இலங்கையின் ரத்தினபுரி பகுதியானது உலகின் ரத்தினங்கள் தலைநகர் என அழைக்கப்படுகிறது. காரணம், அந்த பகுதியில் அதிகளவில் ரத்தினங்கள் கிடைப்பதுதான். இந்நிலையில் அந்த பகுதியில் வசித்துவரும் இரத்தின வியாபாரியான கமாகே என்பவர் வேலையாட்களை கொண்டு தனது வீட்டின் பின்புறம் கிணறு தோண்டியுள்ளார்.
அப்போது பெரியளவில் வித்தியாசமான கல் ஒன்று தென்படுவதாக வேலையாட்கள் கமாகேவிடம் கூறவே, அவருக்கு அந்த கல் மீது சந்தேகம் வந்தது. உடனே அதிகாரிகளை அழைத்து அந்த கல்லை சோதனை செய்தபோது, சந்தேகப்பட்ட படி அது நட்சத்திர நீலக்கல் என்பது தெரியவந்தது.
சுமார் 510 கிலோ எடைகொண்ட அந்த கல்லை அதிகாரிகள் கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டுவந்தனர். இந்த கல்லின் மதிப்பு சர்வதேச சந்தையில் இந்திய மத்தியில் சுமார் 745 கோடி இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.