திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஷாக்கிங்... 200 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட உடல்.!! இளம் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.!!
இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் தனது இளம் மனைவியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் மெட்சன்(28). இவர் ஹோலி பிராம்லி என்ற 26 வயது பெண்ணை கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த மெட்ஸன் அவரது உடலை 200 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு தனது வீட்டின் குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.
பின்பு தனது நண்பரின் உதவியுடன் மனைவியின் உடலை ஆற்றில் வீசி இருக்கிறார். காவல்துறை விசாரணையின் போது உண்மை வெளியானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனைவியை கொலை செய்வதற்கு முன்பாக மனைவி வளர்த்த வளர்ப்பு பிராணிகளையும் மெட்சன் இதேபோன்று கொலை செய்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
கொலை குற்றவாளி மெட்சன் மன நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பது குறித்தும் காவல்துறையினர் சோதனை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். திருமணமான ஒரே வருடத்தில் மனைவி பல துண்டுகளாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்து நாட்டில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.