வாவ்... செம்மையான கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு.!! சிம்பிளான ரெசிபி.!!

வாவ்... செம்மையான கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு.!! சிம்பிளான ரெசிபி.!!



simple-and-tasty-village-style-prawn-gravy-recipe

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிக்கன், மட்டன், பிரான், நண்டு, காடை இப்படி அடுக்கிட்டே போலாம் அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குட்டீஸ்ல இருந்து  பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 1/2 கி இறால், 2 தக்காளி, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பில்லை, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 கப் சின்ன வெங்காயம், புளி எலுமிச்சை, எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, 100 கி கத்தரிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 10 சின்ன வெங்காயம், 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், 1/2 துண்டு பட்டை, 1/2 தக்காளி, 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை அரைப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

Life styleசெய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கத்தரிக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்‌ ஒரு கடையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

Life styleஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.  அதன்பிறகு வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து கொதிக்க விடவும்.  குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் இறாலை சேர்த்து மேலும் வேக விடவும். ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு தயார்.