உடலுறவில் உச்சக்கட்டம் அடைவதால் கிடைக்கும் நன்மைகள்; தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க.!
உடலுறவில் உச்சக்கட்டம் அடைவதால் கிடைக்கும் நன்மைகள்; தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க.!

தாம்பத்தியத்தில் தம்பதிகள் ஈடுபடுவதன் மூலமாக உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. தாம்பத்தியத்தின் போது ஏற்படும் உச்சக்கட்டம், உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயம் சார்ந்த நோய்களை குறைந்து, மன இறுக்கத்தை தம்பதிகளிடையே ஏற்படுத்துறது. அந்த வகையில், உச்சகட்டதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இன்று காணலாம்.
ஆரோக்கியமான சருமம்
பெண்கள் தாம்பத்தியத்தில் உச்சகட்டத்தை அடையும் போது, உடலின் இரத்த ஓட்டம் சீராகும். பிறப்புறுப்பு மட்டுமல்லாது, உடல் முழுவதும் இரத்தம் ஓட்டம் சீராக பாய்வதால் ஆரோக்கியமான சருமம் உருவாகும். இதயத்துடிப்பு சீராகி, இதயம் சார்ந்த நோய்களும் குறையும். உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மையை காட்டிலும், உச்சகட்டத்தால் அதிக நன்மை கிடைக்கும்.
இதையும் படிங்க: 18 Plus: கணவருடன் தனிமை? விரைவில் கர்ப்பமாக டிப்ஸ்.. தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க.!
நல்ல உறக்கம்
மேலும், உச்சக்கட்டத்தின் போது சுரக்கும் எண்டோர்பின், டோபமைன், ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்களும் உடலில் சுரக்கிறது. இதனால் உடலும், மனதும் நிம்மதியடைந்து நல்ல உறக்கம் ஏற்படுகிறது. உறக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் திருமணத்திற்கு பின்னர் நல்ல உடலுறவால் உச்சக்கட்டம் (Orgasm) அடைந்தால் நல்ல உறக்கத்தில் இருப்பார்கள்.
அதனைப்போல, மூளைக்கு இரத்த ஓட்டம் விரைந்து செல்வதால், மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது. உடல்வலி மற்றும் மனவலியை தீர்க்கும் இயற்கை நிவாரணியாக தாம்பத்திய உடலுறவு அமைகிறது.
இதையும் படிங்க: 18 Plus: மது + தனிமை இன்பம் எப்படி இருக்கும்? ஒரே யோசனையா? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!