சீரும் கடலுக்கு நடுவே தியானம்; கடலோடுபோன பிரபல நடிகை.. 24 வயதில் பறிபோன உயிர்.!
சீரும் கடலுக்கு நடுவே தியானம்; கடலோடுபோன பிரபல நடிகை.. 24 வயதில் பறிபோன உயிர்.!
ரஷ்ய நாட்டினைச் சேர்ந்த பிரபல நடிகை காமிலா (Kamilla Belyatskaya) பெலாயட்ஸ்கயா (வயது 24). சமீபத்தில் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள கோசமிய தீவுப் பகுதியில் அவர் சம்பத்தன்று கடற்கரையின் அழகை ரசித்தவாறு இருந்தார். பின் கடலோரம் உள்ள பாறைப்பகுதியில் அமர்ந்தபடி யோகா செய்துகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: தமிழே தெரியாது, ஆனால் பாடல் மட்டும் தெரியும் - சிறுமியின் நெகிழ்ச்சி பாட்டு.. வீடியோ வைரல்.!
அச்சமயம், திடீரென பொங்கியெழுந்த மிகப்பெரிய ராட்சத அலை, நடிகையை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர் கடல் நீரில் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டு ஒருவர் காப்பாற்ற முயன்றும் பலனில்லை.
நடிகையின் உடல் சுமார் மூன்று மைல்கள் தொலைவில் உள்ள மற்றொரு தீவு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகையின் இறுதி தருணம் தொடர்பான பதற வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
கிட்டத்தட்ட 9 அடி உயர அலையில் சிக்கி நடிகை இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சீரியல் நடிகை தற்கொலை செய்த விவகாரம்; கைப்பற்றப்பட்ட கடிதம் - அதிர்ச்சி தகவல்.!