சீரியல் நடிகை தற்கொலை செய்த விவகாரம்; கைப்பற்றப்பட்ட கடிதம் - அதிர்ச்சி தகவல்.!
சீரியல் நடிகை தற்கொலை செய்த விவகாரம்; கைப்பற்றப்பட்ட கடிதம் - அதிர்ச்சி தகவல்.!
மரணிக்க வேண்டும் என்றால் மரணிக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய வாசத்தை எழுதி வைத்து நடிகை தற்கொலை செய்துகொண்டார்.
கன்னட சீரியலில் முன்னணி துணை நடிகையாக வலம் வந்தவர் சோபிதா சிவண்ணா. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற முடிந்தது. திருமணத்திற்கு பின் ஹைதராபாத்தில கணவரின் குடும்பத்துடன் நடிகை வசித்து வந்தார்.
நடிகை சின்னத்திரை பயணங்களில் இருந்தும் அவர் விலகி இருந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்த தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க: சமுத்திரக்கனியின் திரு. மாணிக்கம் படம் வெளியீடு தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கடிதத்தில் தகவல்
இந்நிலையில், நடிகையின் தற்கொலை கடிதம் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், "மரணிக்க வேண்டும் என்றால் மரணிக்கலாம்" என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நடிகை மன அழுத்தத்தில் இருந்தாரா?
விசாரணை முன்னெடுப்பு
நடிப்பிலிருந்து விலகியதன் காரணமாக மனஉளைச்சல் அடைந்தாரா? பிற பிரச்சனைகளை எதிர்கொண்டு மன உளைச்சல் ஏற்பட்டதா? கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என பல கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாட்டில் ராதா படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!