மிஷ்கினின் சர்ச்சை பேச்சு.. நடிகர் அருள்தாஸ் கண்டனம்.!
மிஷ்கினின் சர்ச்சை பேச்சு.. நடிகர் அருள்தாஸ் கண்டனம்.!

மேடை நாகரீதம் தெரிந்தவர், மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என நடிகர் அருள்தாஸ் பேசினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், முக்கிய நடிகராகவும் வலம்வருபவர் மிஸ்கின். இவர் அவ்வப்போது திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு விழாவில் கலந்துகொண்டு, தனது பாணியில் ஒருசில விஷயங்களை வெளிப்படையாக பேசுவார். அப்போது, சில ஆபாச சர்ச்சைக்குரிய வார்த்தைகளையும் கூறுவார்.
இதையும் படிங்க: வல்லான் திரைப்படத்துக்கு யுஏ சான்றிதழ்; தணிக்கைக்குழு அறிவிப்பு.!
சர்ச்சை பேச்சு
நடிகர் கூல் சுரேஷ் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின்போதும், படத்தை பார்த்துவிட்டு கத்தி-கூப்பாடுபோட்டு வித்தியாசமான முறையில் விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதைப்போல, மிஷ்கினும் அவரின் பாணியை பின்தொடர்ந்து வந்தார். சமீபத்தில் நடந்த பாட்டில் ராதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும், சில சர்ச்சைக்குரிய வார்த்தை, வசனத்துடன் பேசி இருந்தார். இது மேடையில் இருந்த பா. ரஞ்சித்தையும் முகம் சுளிக்க வைத்தது.
நடிகர் கண்டனம்
இந்த விஷயத்தை கண்டிக்கும் வகையில், "மேடை நாகரீகம் முக்கியம். ஒருவர் நம்மை அண்ணனாக நினைப்பதால், நாம் வாடா தம்பி என அழைக்கிறோம். ஆனால், மிஸ்கின் எங்கு பார்த்தாலும் வாடா போடா, ஆபாச பேச்சு என்பது எப்படிப்பட்டது? மிஸ்கின் நாடக மேடையில் இருந்து வந்தவர். அவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும். எனினும், எதற்காக இப்படி அவர் செயல்படுகிறார் என தெரியவீல்லை" என நடிகர் அருள்தாஸ் பேசினார்.
இதையும் படிங்க: ராதா ரவியின் கடைசி தோட்டா திரைப்படம்; டீசர் காட்சிகள் வைரல்.!