#Video :சாமி பட வில்லனா இவர்..? அட பாவமே.! இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க.!
சாமி பட வில்லனா இவர்..? அட பாவமே.! இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க.!

சியானின் வெற்றி படம் :
சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகிய திரைப்படம் தான் சாமி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க, இதில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருப்பார். இந்த படம் அப்போது மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதன் பாடல்கள் கூட அனைவருக்கும் மிகவும் பிடித்தது.
தோல்வியடைந்த சாமி 2 :
இதை அடிப்படையாகக் கொண்டு சாமி 2 படம் எடுத்த நிலையில், அந்த படம் தோல்வியை தழுவியது. ஆனால் இப்போதும் சாமி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பு தான் இருந்து வருகிறது. இதில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் கோடா சீனிவாச ராவ் நடித்து இருப்பார்.
இதையும் படிங்க: ஆத்தி.. 90'ஸ் கிட்ஸ்களை பதறவைத்த பொட்டு அம்மன் பட வில்லன்: இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?.!
ரசிகர்கள் சோகம் :
தெலுங்கில் இவர் நிறைய படங்களில் நடித்து இருக்கின்றார். தமிழைப் பொறுத்தவரை சாமி மட்டுமல்லாமல் தலைவன், திருப்பாச்சி, குத்து, சத்யம் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து இருக்கின்றார். இவருக்கு தமிழில் ரசிகர் கூட்டம் அதிகம். இந்த நிலையில் இவரது சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது
வாக்களிக்க வந்த கோடா ஸ்ரீனிவாச ராவ் :
அதற்கு காரணம் இன்று வாக்கு பதிவிற்காக எலக்ஷன் பூத்திற்கு அவர் வந்தபோது தள்ளாடி தள்ளாடி ஒருவரின் உதவியுடன் நடந்து வந்து அவர் வாக்கு பதிவு செய்துள்ளார். வில்லனாக மாஸ் காட்டிய நடிகருக்கா இந்த நிலைமை என இதை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இனி வில்லனாக நடிக்கமாட்டேன்.! விஜய் சேதுபதி ஷாக் முடிவு.! இதுதான் காரணமா??