திரைப்பிரபலங்களின் விவாகரத்து; நடிகை சினேகா - பிரசன்னா நச் பதில்.!
திரைப்பிரபலங்களின் விவாகரத்து; நடிகை சினேகா - பிரசன்னா நச் பதில்.!
தமிழ்த் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா, இன்று வரை இணைபிரியதா தம்பதியாகவும், மிகப்பெரிய காதல் - அன்புக்கு அடையாளமாகவும் வாழ்ந்து வருகின்றனர். தற்போது கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்ற சினேகாலயா சில்க்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
விவாகரத்து தனிப்பட்ட விருப்பம்
அங்கு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரசன்னா - நடிகை சினேகா தம்பதி, "நடிகை சினேகாவின் சினேகாலயா என்பது அவரின் கனவு. கர்நாடக பாடகர்கள் சேலைகளை பாரம்பரியம் மாறாமல் பாதுகாத்து வருகின்றனர். திரைபிரபலங்கள் விவாகரத்து குறித்து எந்த விதமான ஆலோசனையும் வழங்க முடியாது. அவரவர் தனிப்பட்ட விருப்பம் அது.
இதையும் படிங்க: சிவந்த கண்கள்.. விஜய் சேதுபதியை காண்டாக்கிய பவித்ரா; எதிர்ப்புக்குரலில் நெட்டிசன்கள்.!
விஜயின் அரசியல் பிரவேசம்
அதில் கருத்துச்சொல்ல முடியாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள். அவர் இன்று அரசியலுக்கு வந்துள்ளார். அவர் நல்லது செய்ய வேண்டும் என வருகிறார், வரட்டும் நல்லது செய்யட்டும். நல்ல படங்கள் விஜயுடன் மீண்டும் கிடைத்தால், நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேவேந்திர பட்னாவிசை நேரில் சந்தித்த தி சபர்மதி ரிப்போர்ட் படக்குழு.!