×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!

#Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!

Advertisement

அமரன் படத்தின் வாயிலாக, நடிகர் ரஜினிகாந்த் இராணுவத்தில் பணியாற்றிய தனது இரண்டாவது அண்ணனை நினைவுகூர்ந்தார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் உட்பட பலர் நடித்து தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அமரன் (Amaran). இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார், சிஎச் சாய் ஒளிப்பதிவு பணிகளையும், கலைவாணன் எடிட்டிங் பணிகளையும் திறம்பட மேற்கொண்டு இருந்தனர். ரூ.150 கோடி செலவில், கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவான படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் உலகளவில் வெளியானது. 

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.43 கோடி வசூல் செய்திருந்தது.

இதையும் படிங்க: "அப்பாவுக்கு உடம்பு சரியில்லை" - ரஜினி ரசிகர் கோரிக்கை.!

இயக்குனர், நடிகர்-நடிகைக்கு பாராட்டு

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று அமரன் படத்தை பார்த்துவிட்டு படத்தை தயாரித்து வழங்கிய நடிகர் கமல் ஹாசனை தொடர்புகொண்டு பாராட்டிய நிலையில், இன்று படக்குழுவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நேற்றுதான் அமரன் படம் பார்த்தேன். இதற்கு முதலில் கமல் ஹாசனை எவ்வுளவு பாராட்டினாலும் தகாது. ஏனெனில், முகுந்த் வரதராஜன் வாழ்க்கை படத்தை எடுத்ததற்கு பாராட்டு. அந்த படத்தை இயக்கிய விதம் அருமை. பல இராணுவ படங்கள் வந்தாலும், இதுபோன்ற படம் எடுத்ததற்கு ராஜ்குமாருக்கு பாராட்டு. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வாழ்ந்துள்ளார். 

அண்ணனை நினைவு கூர்ந்த ரஜினி

அவரின் திரை வாழ்க்கையில் இது மிகப்பெரிய மைல் கல் திரைப்படம், சாய்பல்லவியின் நடிப்பும் அருமை. படத்தை பார்த்து முடிக்கும்போது என்னால் கண்களில் நீரை தவிர்க்க முடியவில்லை. எனது இரண்டாவது அண்ணா நாகேஷ் ராஜ் கைக்கவாட், சீனாவுக்கு எதிரான போரில் முதுகெலும்பில் குண்டு வாங்கி, 14 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி பின் ஓய்வு எடுத்துக்கொண்டார். 

தேசப்பற்றை உணருவோம்

இந்த படம் ஒவ்வொரு இராணுவ வீரரின் வலியை எடுத்துரைக்கும் திரைப்படம். அனைவரும் இதனை கட்டாயம் பார்க்க வேண்டும். தேசப்பற்று நம்மில் ஊறிப்போன ஒன்று, அதனை படம் மீண்டும் புதுப்பிக்கிறது. இராணுவ வீரர்கள் இல்லையென்றால் நாம் இல்லை. அவர்கள் எல்லையை காக்காவிடில் நாம் இல்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். 

இராணுவ வீரரின் வலி, வேதனை, சாதனைகளை நாம் உணர வேண்டும். இந்த படத்தை எடுத்த கமலுக்கு பாராட்டுக்கள். படக்குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். அமரன் ஜெய்ஹிந்த்" என பேசினார்.

ரஜினியின் பாராட்டு

 

இதையும் படிங்க: வேட்டையன் வெற்றி விழா; தனது கைகளால் உணவு வழங்கிய நடிகை ரித்திகா சிங்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajinikanth #Amaran #tamil cinema #sivakarthikeyan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story