அடையாளமே தெரியல.. குழந்தையோடு குழந்தையாக சிம்பு.. வைரல் வீடியோ.!
அடையாளமே தெரியல.. குழந்தையோடு குழந்தையாக சிம்பு.. வைரல் வீடியோ.!
ஐசரி கணேஷ் சர்ச்சை
மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கின்ற திரைப்படம் தான் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்த அறிவிப்பு வெளியாகிய சில நாட்களில் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் கொரோனா குமார் திரைப்படத்தில் நடித்துக் கொடுக்காமல் இழுத்து அடிக்கிறார் என புகார் அளித்தார்.
தீவிரமான சிம்பு
கமலுடன் சிம்பு இணையவதை அவர் விரும்பவில்லை என குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து ஐசரி கணேஷ், "கமல் படத்தில் நடிப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. அந்த படத்தை முடித்துவிட்டு என் படத்திலும் நடிக்க வேண்டும்." என்று தெரிவித்தார். நடிகர் சிம்பு தக் லைஃப் படபிடிப்புக்காக தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: டாக்டரை கரம்பிடிக்க போகும் சிம்பு.. விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு.?!
குழந்தையான சிம்பு
இந்த நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் தனது ரசிகர்களை சந்தித்து இருக்கிறார். தோள்பட்டை வரை முடியை வைத்துக்கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் சிம்பு குழந்தைகளுக்கு கை கொடுத்து அவர்களுடன் பேசுகின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தையோடு குழந்தையாக சிம்பு கொஞ்சி விளையாடும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தில் இந்த மாஸ் நடிகரா.! லுக்கே மிரள வைக்குதே.! வெளிவந்த மாஸ் போஸ்டர்!!