தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இயக்குனரின் பெயரைச்சொல்லி நடிகையிடம் அத்துமீறல்.. இளவயதில் நடந்த மோசமான அனுபவம்.. நடிகை ஓபன் டாக்.!

இயக்குனரின் பெயரைச்சொல்லி நடிகையிடம் அத்துமீறல்.. இளவயதில் நடந்த மோசமான அனுபவம்.. நடிகை ஓபன் டாக்.!

Actress Ashwini Face Sexual Harassment in Childhood  Advertisement

 

தமிழ் திரையுலகில் நடிகைக்கு எதிராக பல துயரங்கள் நடந்து வரும் நிலையில், பலரும் அதனை எதிர்காலம் உட்பட பல்வேறு காரணத்தால் புறந்தள்ளி செல்கின்றார். இவ்வாறான காம கொடூர மிருகங்களுக்கு மத்தியில் தான், திரைத்துறையில் கருத்து சொல்லி படம் எடுத்து பெயரை பெறுகின்றனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்து, முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அஸ்வினி. தற்போது திருமணம் முடிந்து இவர் கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 

இதையும் படிங்க: ரூ.15000 ஆட்டைய போட்டாங்கப்பா.. அழுவாகா? சிரிக்காவா? - சீரியல் நடிகருக்கு விபூதி அடித்த மோசடி ஆசாமி.!

சில நாட்களுக்கு முன்பு அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில், தனது வாழ்நாட்களில் தான் எதிர்கொண்ட பிரச்சனை மற்றும் அதில் இருந்து மீண்டு, இன்று அனைத்தையும் கடந்து நல்ல நிலையில் வாழ்ந்து வருவதாகவும் கூறி இருக்கிறார். வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த நடிகை, தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 

தனது இளம் வயதில் திரைத்துறையை சேர்ந்த நபரால் பலாத்காரத்தை எதிர்கொண்டதாக நடிகை பேசிய காணொளி

 

இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், "எனது இளமை காலத்தில் நடந்த விஷயம் அது. நான் அதனை கடந்து சென்றுவிட்டேன். அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. எனது தந்தை வயதில் இருக்கும் நபர் ஒருவர், அவரது அலுவலகத்தில் வைத்து என்னிடம் தவறாக நடந்துகொண்டார். எனது அம்மா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டபோது, அவர் வரவில்லை. 

அந்த தருணத்தை பயன்படுத்தி என்னிடம் அவர் அத்துமீறினார். எனக்கு அந்த வயதில் அது யாரின் தவறு? என நடந்தது என்பதை கூட புரிய இயலவில்லை. வீட்டிற்கு சென்று அம்மாவிடம் கூறினேன். அவர்தான் இது உன் தவறு இல்லை என கூறினார். இன்று அந்த விஷயத்தை நான் கடந்து வந்துவிட்டேன்" என பேசினார்.

நடிகை தனக்கு நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்த காணொளி

இதையும் படிங்க: சூர்யா 45 படப்பிடிப்பு நிறுத்தம்; மக்கள் புகாரால் காவல்துறை அதிரடி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harassment #Tamil actress #tamil cinema #நடிகை அஸ்வினி #கிழக்கு சீமையிலே
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story