சூர்யா 45 படப்பிடிப்பு நிறுத்தம்; மக்கள் புகாரால் காவல்துறை அதிரடி.!
சூர்யா 45 படப்பிடிப்பு நிறுத்தம்; மக்கள் புகாரால் காவல்துறை அதிரடி.!

நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி, தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில், நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளார்.
சூர்யாவின் 45 வது திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடப்பதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!
படப்பிடிப்புகள் நிறுத்தம்
ஈசிஆர் சாலையில், கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் உள்ள வெளிச்சை கிராம பகுதியில், திடீரென சாலைகளை மறித்தபடி படப்பிடிப்பு பணிகளுக்கான மேடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் காவல்துறையினர், படப்பிடிப்பு முதற்கட்ட பணிகளை தடுத்து நிறுத்தினர்.
மேலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய முன் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தியதால், மேடை அமைக்கும் பணிகள் கைவிடப்பட்டன.
விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் படப்பிடிப்பு பணிகளை முடித்து, செப்டம்பர் மாதம் சூர்யா 45 படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!