அச்சச்சோ.. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்-க்கு என்ன ஆச்சு?.. மருத்துவமனையில் அனுமதி..! சோகத்தில் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்-க்கு என்ன ஆச்சு?.. மருத்துவமனையில் அனுமதி..! சோகத்தில் ரசிகர்கள்.!
80 கிலோ எடையை தூக்கியாதால், பாரம் தாங்காமல் முதுகில் காயம் ஏற்பட்ட நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியான படங்களில் நடித்து, இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ரகுல் பிரீத்தி சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதனைத்தொடர்ந்து, தேவ், என்.ஜி.கே, இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: வேட்டையன் படத்தில் டெலீட் செய்யப்பட்ட ரஜினி - பகத் பாசில் காட்சிகள்; வீடியோ உள்ளே.!
உடற்பயிற்சி
கடந்த பிப்ரவரி மாதம் இவர் ஜாக்கி பாஞானியை திருமணம் செய்து தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இதற்காக உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க தீவிர உடற்பயிற்சியும் செய்கிறார்.
முதுகில் காயம்
இந்நிலையில், 80 கிலோ எடையை உரிய பாதுகாப்பு உபகரணம் இன்று அவர் தூக்க முயற்சித்தால், முதுகு எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட நடிகை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் நடிகை ரகுல், தான் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த அவரின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். மேலும், உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள், சற்று கவனமாக செயல்பட்டு இருக்கலாமே எனவும் சமூக வலைதளத்தில் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: வீட்டைச்சுற்றி தேங்கிய வெள்ளம்.. வெளியேறிய நடிகர் ஸ்ரீமன்..!