துபாய் மண்ணில் சாதித்த அஜித்; 500 பேருக்கு அன்னதானம் கொடுத்த ரசிகர்கள்.!
துபாய் மண்ணில் சாதித்த அஜித்; 500 பேருக்கு அன்னதானம் கொடுத்த ரசிகர்கள்.!
தமிழ் நடிகர் & அல்டிமேட் சூப்பர்ஸ்டார் அஜித்குமார், துபாயில் நடைபெற்ற 24 மணிநேர கார் பந்தய போட்டியில், மூன்றாவது இடத்தை தக்கவைத்து பெருமை சேர்த்திருந்தார். இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. மாநில அளவிலும், தேசிய அளவிலும் வாழ்த்துக்களை குவித்தது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
வெற்றிக்குப்பின்னர் பேட்டி அளித்த நடிகர் அஜித், ரசிகர்கள் தங்களின் குடும்பத்தை கவனியுங்கள். உங்களை பார்த்துக்கொள்ளுங்கள். அஜித், விஜய் என கோஷம்போட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. உழைப்பை நம்புங்கள் என தெரிவித்து இருந்தார். அஜித் குமாரின் வெற்றியை அவர்களின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 உறுதி; வெளியானது டீசர் வீடியோ.! கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!
500 பேருக்கு அன்னதானம்
இந்நிலையில், அஜித் ரசிகர் சார்பில், அவரின் வெற்றியை அடுத்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அவர்களின் ட்விட் பதிவில், "எங்கள் அண்ணன் அஜித்குமாா் அவா்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக வீரசென்னை #AK நற்பணி இயக்கம் சாா்பாக இன்று பொங்கல் திருநாளன்று 500பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... அண்ணா நீங்க ஆசைப்பட்ட மாதிாி உங்க வழியில நாங்களும் நல்வழியில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் அண்ணா" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!