வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
பாபி கொல்லி இயக்கத்தில், சித்தாரா என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் பாலகிருஷ்ணா @ பாலையா, பாபி டியோல், ஊர்வசி ரௌடெல்லா, ப்ரயாக் ஜபீஷ்வால், சாந்தினி சௌதாரி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விடிவி கணேஷ் உட்பட பலர் நடிக்க 12 ஜனவரி 2025 அன்று வெளியான திரைப்படம் டக்கு மகராஜ்.
ரூ.100 கோடி செலவில் உருவாகிய திரைப்படம், ரூ.60 கோடியை கடந்த முதல் நாளில் வசூல் செய்துள்ளது. இதனால் அடுத்தடுத்து வரும் நாட்களில் எளிதில் நல்ல வசூலை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலையா டான்ஸ்
தமன் இசையில், தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படம் 109 வது பாலையாவின் திரைப்படம் ஆகும். இந்நிலையில், படம் வெற்றியடைந்துள்ளதைத் தொடர்ந்து, பாலையா மற்றும் ஊர்வசி நடனம் ஆடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
இதையும் படிங்க: மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!