மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
தி மிச்செலின் 20 வது 24எச் துபாய் சாம்பியன்ஷிப் கார் ரேஸிங் போட்டி துபாயில் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரும் பங்கேற்கிறார். இதற்காக அவர் சமீபத்தில் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு இருந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி அவர் தப்பித்த தருணமும் நடந்தது.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினி, மகள் அனெளக்சா குமார் (Anouksha Kumar) ஆகியோருடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவில், மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் அஜித், அவர்களுடன் உரையாடுகிறார். மகள் தந்தைக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்வது உணரப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
இதையும் படிங்க: #Breaking: நடிகர் அஜித் குமார் பயணித்த கார் விபத்து; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய தல.. ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு.!