தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முஸ்லீம், ஆர்ட்டிஸ்க்கு வீடு இல்லை.. கலங்கி நின்ற அறந்தாங்கி நிஷா செய்த தரமான சம்பவம்.! செம கெத்துதான்..

முஸ்லீம், ஆர்ட்டிஸ்க்கு வீடு இல்லை.. கலங்கி நின்ற அறந்தாங்கி நிஷா செய்த தரமான சம்பவம்.! செம கெத்துதான்..

aranthangi-nisha-bought-new-home-in-chennai Advertisement

விஜய் தொலைக்காட்சிகளில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல மேடை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றிலும் கலந்துகொண்டு கலக்கி வருகிறார். தொடர்ந்து அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். 

அறந்தாங்கி நிஷா சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் கால்பதித்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் வெள்ளம், கொரோனா காலங்களில் கஷ்டப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்துள்ளார். 


இதையும் படிங்க: கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.! 

அறந்தாங்கி நிஷா தற்போது சென்னையில் புதிதாக வீடு ஒன்று வாங்கி பால் காய்ச்சியுள்ளார். இது குறித்து எமோஷனலாக அவர் வெளியிட்ட பதிவில், உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தோட சென்னை வீடு பால் காய்ச்சியாச்சு. வீட்டுக்கு அப்பாவோட பெயர் தான் வச்சிருக்கேன் எனக் கூறியுள்ளார். மேலும் அவர், ஆறு மாசமா சென்னையில வீடு தேடுனப்போ ஆர்டிஸ்ட்டுக்கு வீடு தர மாட்டேன், முஸ்லிம்க்கு வீடு தர மாட்டேன் இப்படி எத்தனையோ விமர்சனங்களை சந்தித்ததுக்கு அப்புறம் குடும்பமா சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்கிறலாம்னு முடிவு எடுத்து இப்போ வீடு வாங்கியாச்சு.

எப்பவுமே எல்லாரும் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட நம்ம எங்க தோக்குறமோ அங்கதாங்க ஜெயிக்கணும், என்னோட வெற்றிக்கு எப்பவுமே என்னுடைய குடும்பமும் என்னுடைய நண்பர்களும் என்னுடைய ரசிகர்களும் என்னுடைய தமிழும் தான் காரணம், எல்லாருக்குமே ரொம்ப நன்றி.என்னுடைய வளர்ச்சியை உங்களுடைய வளர்ச்சியா பாக்குறதுக்கும், என்னை எப்பவுமே உங்களில் ஒருத்தியா பார்க்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aranthangi nisha #Home #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story