காதலருக்காக ஓட்டு சேகரிக்கும் அர்ச்சனா?.. நேரம் பார்த்து நெருக்கமான வீடியோ வைரல்.! நெட்டிசன்ஸ் கேள்வி.!!
காதலருக்காக ஓட்டு சேகரிக்கும் அர்ச்சனா?.. நேரம் பார்த்து நெருக்கமான வீடியோ வைரல்.! நெட்டிசன்ஸ் கேள்வி.!!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், தமிழ் மக்களிடம் பரிட்சயமான நடிகையாக இருந்து வந்தார். அதனைத்தொடர்ந்து, பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் கலந்துகொண்டு வெற்றியாளராகவும் உயர்ந்தார்.
அர்ச்சனா - அருண் காதல்
அதேபோல, சீரியலில் நாயகனாக நடித்து வந்த அருண் பிரசாத், தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் 90 நாட்களை கடந்து வீட்டிற்குள் பயணித்து வருகிறார். அருண் - அர்ச்சனா இடையே காதல் உறவு இருந்து வந்த நிலையில், அருணுக்கு ஆதரவாக அர்ச்சனா பேச தொடங்கியபோது, இருவரின் காதல் உறுதியானது. மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற அர்ச்சனா, அருணிடம் சில ஆலோசனையும் வழங்கி வந்தார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ரொமான்ஸ் வீடியோ வைரல்:
இந்நிலையில், அர்ச்சனா - அருண் இடையேயான காதல் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இருவரும் தங்களின் தனிப்பட்ட பயணத்தில், மகிழ்ச்சியாக இருந்த காணொளிகளை அர்ச்சனா வெளியிட்டு இருக்கிறார். இவர்களின் காதல் நீண்ட காலமாக ரகசியமாக இருந்ததாக தெரியவரும் நிலையில், ஜோடி அன்பை பகிர்ந்த காணொளிகள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது.
மேலும் 90 நாட்களை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், இத்தனை நாள் போடாத இந்த வீடியோவை நேரம் பார்த்து ஓட்டுக்காக இப்போது அவர் வெளியிட்டுள்ளதாக பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். அதில் எதற்காக பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிவிக்க சில நாட்களே இருக்க இப்படி அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள், காதலருக்காக ஓட்டு சேகரிக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அர்ச்சனா - அருண் காதல் காணொளி
இதையும் படிங்க: "இருவரும் உண்மையா இல்ல, ரொம்ப வீக்" - சுனிதாவால் கதறியழுத சௌந்தர்யா, ஜாக்குலின்.!