"ஆசிட் அடிச்சிருவேன், கொன்றுவிடுவேன்" பிக்பாஸ் தமிழ் நடிகைக்கு பகிரங்க மிரட்டல்.. பரபரப்பு குற்றச்சாட்டு.!
ஆசிட் அடிச்சிருவேன், கொன்றுவிடுவேன் பிக்பாஸ் தமிழ் நடிகைக்கு பகிரங்க மிரட்டல்.. பரபரப்பு குற்றச்சாட்டு.!
தமிழ் நடிகை ஒருவருக்கு சமூக வலைத்தளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா ரவி, இவர் தமிழில் டிமான்டி காலனி 2 படத்தில் நடித்துள்ளார். தற்போது அடுத்தடுத்த படவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நடிகை, பிக் பாஸ் இல்லத்தில் இருக்கும் நடிகர் அருணின் ஆதரவாளர், நண்பர் ஆவார்.
கொலை மிரட்டல்
அவ்வப்போது தனது சமூக வலைத்தளபக்கத்தில் நடிகர் அருணுக்கு ஆதரவான கருத்துக்களை அவர் பகிர்ந்து வந்தார். அந்த வகையில், கடந்த வாரம் அவர் பதிவு செய்த சில கருத்துக்கள் எதிர்ப்பை சந்தித்ததாக தெரியவருகிறது. இதனிடையே, அப்பதிவுகளை மையப்படுத்தி, நடிகைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
வாழ்க்கை கிரிக்கெட் போன்றது. கடந்த ஆண்டில் நீங்கள் எந்த விளையாட்டில் ஈடுபட்டாலும், இந்த ஆண்டு உங்களுக்கு பிடித்த அணியை உற்சாகப்படுத்தலாம். எனக்கு தொடர்ந்து பல மிரட்டல் வருகிறது. ஆசிட் அடிப்பேன், கொலை செய்திடுவேன் என என்னை பயமுறுத்துகிறார்கள்.
தவறான தகவலை உள்நோக்கத்துடன் பகிரும் நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். சில கொலை மிரட்டல் குறித்த தகவல்கள் இங்கு உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: The Sabarmati Report: தி சபர்மதி ரிப்போர்ட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.!