"கதவை திறக்குறேன் வந்துருங்க" - பிக்பாஸ் 8 கோவா குழுவுக்கு விஜய் சேதுபதி எச்சரிக்கை.!
கதவை திறக்குறேன் வந்துருங்க - பிக்பாஸ் 8 கோவா குழுவுக்கு விஜய் சேதுபதி எச்சரிக்கை.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி 62 வது நாளினை எட்டி இருக்கிறது. கடந்த வாரத்தில் நடந்த ஏஞ்சல்-டெவில் டாஸ்கில் சொதப்பல், வன்மம் என அதகளம் கண்டு இருந்தது.
கோவா கேங்
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் கோவா கேங் என்ற புதிய குழு உருவாகியுள்ளது. இந்த குழுவில் ஜாக்குலின், ஜெப்ரி, ஐஸ்வர்யா, ராணவ், ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் டாஸ்கில் விளையாடும்போது, சில நேரம் விளையாட்டில் விட்டுக்கொடுக்கின்றனர்.
இதையும் படிங்க: சிவந்த கண்கள்.. விஜய் சேதுபதியை காண்டாக்கிய பவித்ரா; எதிர்ப்புக்குரலில் நெட்டிசன்கள்.!
வெளிய வந்துருங்க
இதனால் ஆட்டத்தின் சுவாரஷ்யம் கெடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதியும், அவர்களை கண்டிக்கிறார். மேலும், கோவா கேங்குக்கு ஆசை இருந்தால், கதவை திறக்க சொல்கிறேன், தயவு செய்து வந்துவிடுங்கள். வீட்டில் இருந்து ஆட்டத்தின் சுவாரஷ்யத்தை கெடுக்க வேண்டாம் என கோரிக்கை வைக்கிறார்.
இதனால் கோவா கேங் என அடையாளப்படுத்தப்பட்ட குழு அதிர்ச்சியை சந்திக்கிறது.
இதையும் படிங்க: "ரோஷம் இருக்கா? எங்க வீட்டு உப்பையும் சேர்த்து தின்னுங்க" - தர்ஷிகா கிளப்பிய புயல்.. கடுப்பில் அந்த 2 போட்டியாளர்கள்.!