அடுத்தடுத்த படங்களுக்கு ரெடியா? கோவை சூர்யா ரசிகர்கள் செய்த போஸ்டர் சம்பவம்.!
அடுத்தடுத்த படங்களுக்கு ரெடியா? கோவை சூர்யா ரசிகர்கள் செய்த போஸ்டர் சம்பவம்.!
சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு உட்பட பலர் நடிக்க சமீபத்தில் வெளியான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், வணிக ரீதியாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
ஜோதிகா குற்றசாட்டு
இந்த விஷயம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. மேலும், நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் குறித்து வேண்டும் என்றே தவறான விமர்சனம் முன்வைக்கப்படுவதாக ஜோதிகா குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். இந்த விவகாரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது.
இதையும் படிங்க: Wow... அல்டிமேட் லெவலில், ஸ்டைல் மன்னனாக தல அஜித்.. வைரல் கிளிக் இதோ.!
ரசிகர்கள் போஸ்டர்
இந்நிலையில், சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து 2 படங்கள் வெளியாகவுள்ள நிலையில், அப்படங்களை வெற்றிப்படமாக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனை முன்னிட்டு கோவையில், ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அடுத்தடுத்து வெற்றிகளை சூர்யா நிச்சயம் தருவார் என்ற பாணியில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் திரைக்கு வருகிறது ஜிவி பிரகாஷின் பிளாக்மெயில் திரைப்படம்; டப்பிங் பணிகள் தொடக்கம்.!