ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, பாபி உட்பட பலர் நடிக்க உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா (Kanguva). படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.
எதிர்மறை விமர்சனம் கண்டாலும் தொடர்ந்து ஆதரவு
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் எடிட்டிங்கில், மதன் கார்க்கி வசனத்தில் படம் தயாராகி இருந்தது. நவ.14 அன்று வெளியான திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் திரையிடப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக முதலில் பிரச்சனையை எதிர்கொண்டாலும், பின் ஆதரவை பெற்றது.
இதையும் படிங்க: " அண்ணனை சைட் அடிப்பியா என கேட்ட தோழிகள்" சூர்யாவின் தங்கை கூறிய உண்மை சம்பவம்.!?
ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா
இந்நிலையில், 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை முன்னிட்டு, உலகில் இருந்து 300 க்கும் அதிகமான திரைப்படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 207 சிறந்த படங்களின் பட்டியலில், கங்குவாவும் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகள் அடிப்படையில் படம் முன்னேறி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல, பிரித்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படமும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: Nagabandham: நாகபந்தம் படத்தின் முக்கிய அப்டேட்; பொங்கலுக்கு மாஸ் தகவல் சொன்ன படக்குழு.!