"சைபர் அடிமையாக வெளிநாடுகளில் சிக்கும் நபர்களை மீட்பது இந்தியா மட்டுமே" - நீயா நானா நிகழ்ச்சி வீடியோ வைரல்.!
சைபர் அடிமையாக வெளிநாடுகளில் சிக்கும் நபர்களை மீட்பது இந்தியா மட்டுமே - நீயா நானா நிகழ்ச்சி வீடியோ வைரல்.!
துபாய், இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு போலி விசா மூலமாக அல்லது சுற்றுலா விசா மூலமாக பணிக்கு செல்வோர், ஒப்பந்த அடிப்படையில் சிக்கிக்கொள்கின்றனர். இவர்களை இந்திய அரசு மட்டுமே மாதம் 500 நபர்கள் வீதம் மீட்டுக் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் குறித்து விஜய் டிவியில் நீயா நானா? நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சைபர் குற்றங்கள் தொடர்பான விவாதத்தில், இளைஞர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தினார். அதாவது, சைபர் குற்றங்களில் ஈடுபடும் இந்தியர்கள் பிணையக்கைதியாக சிக்கிக்கொள்ள, அவர்களை வெளிநாட்டில் மீட்கப்பட்டது குறித்து அவர் பேசினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்தப்படும் நிறுவனங்களிடம் இருந்து தப்பித்து வந்தது மிகப்பெரிய விஷயம். சைபர் அடிமைகள் எனப்படும் இவர்கள் ஒருவேளை இறந்துவிட்டால் கூட, அவரின் புகைப்படம் மற்றும் ஒப்பந்தம் ஆகியவற்றை காண்பித்து கூட அவரின் குடும்பத்தினரிடம் பணம் பறிப்பார்கள்.
இதையும் படிங்க: "அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
குடும்பத்துக்கும் மிரட்டல்
இவர் வேலைக்காக செல்லும்போது ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அதில் ஓராண்டு என எழுதிவிட்டு (எண்களின் 1 என குறிப்பிட்டு), பின் அவர்கள் இறந்துவிட்டால் பத்து ஆண்டுகள் என அதனை மாற்றி குடும்பத்திற்கு அனுப்பி பணம் கேட்பார்கள். சைபர் அடிமைகள் வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தால் மோசடி செயல்களுக்காக பிரித்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுவார்கள்.
மின்சாரம் பாய்ச்சி தண்டனை
சுற்றுலா விசாவில் தெற்காசிய நாடுகளுக்கு சென்று, வேலை தேடுவோர் இந்த விஷயத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இவ்வாறாக சென்று திரும்பி வராமல் இருக்கும் நபர்கள் குறித்து இந்திய அரசு கண்காணித்து, அவர்களை மீட்கிறது. இவர்கள் அங்கிருந்து தப்பி செல்லவோ அல்லது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கவோ முயற்சித்தால், மின்சாரம் பாய்ச்சி தண்டிப்பார்கள். சில நேரம் உயிரிழப்பும் ஏற்படும்.
இந்தியர்களை மீட்கும் இந்திய அரசு
சுற்றுலா விசாவில் சென்று, திரும்பி தகவல் கொடுக்காத அல்லது தாயகம் திரும்பாத நபர்களின் விபரங்களை இந்திய அரசு சேகரித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இந்திய அரசு களமிறங்கிய அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு வருகிறார்கள். எஞ்சிய நாட்டவர்கள் அப்படியே இருக்கிறார்கள். இப்படி சிக்கிக்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 5000 என கூறப்படுகிறது. இவர்களில் ஒவ்வொரு மாதமும் 500 பேர் வீதம்தகவல் கிடைக்கக்கிடைக்க மீட்கப்பட்டு வருகிறார்கள்" என பேசினார்.
இதையும் படிங்க: வேட்டையன் வெற்றி விழா; தனது கைகளால் உணவு வழங்கிய நடிகை ரித்திகா சிங்.!