Big News: விஜய் டிவி நிர்வாகத்துக்கு மறைமுக முட்டுக்கட்டை? இணையத்தில் பற்றிய தீ.. மும்மொழிக்கொள்கை விவாதத்தை ஒளிபரப்ப தடை?
Big News: விஜய் டிவி நிர்வாகத்துக்கு மறைமுக முட்டுக்கட்டை? இணையத்தில் பற்றிய தீ.. மும்மொழிக்கொள்கை விவாதத்தை ஒளிபரப்ப தடை?

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா? விவாத நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. இவை மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. விவாத நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை புதிய தலைப்புடன் வெளியாகும்.
நிகழ்ச்சி ஒளிபரப்ப மறைமுக தடை?
இந்நிலையில், மார்ச் 04 அன்று விஜய் டிவியின் வலைப்பக்கத்தில் மும்மொழிக்கொள்கை ஆதரவு, எதிர்ப்பு நீயா நானா? தொடர்பு போஸ்டர் வெளியானது அந்த வாரத்தில் இதுதொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமே மிஞ்சியது. அதேபோல, நடப்பு வாரத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட மும்மொழிக்கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சியும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: விஜய்டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென நடந்த விபத்தில் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட்.....வைரலாகும் வீடியோ காட்சி....
சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்
இதனால் விஜய் டிவி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து, மும்மொழிக்கொள்கை தொடர்பான விவாத தலைப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் புகுந்த புது வில்லி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...