மழைக்காலங்களில் அதிகமாக பல் வலி வர என்ன காரணம்?!. உங்கள் பிரச்சனைக்கு உடனே தீர்வு!
மழைக்காலங்களில் அதிகமாக பல் வலி வர என்ன காரணம்?!. உங்கள் பிரச்சனைக்கு உடனே தீர்வு!
பல் வலி வருவதற்கு முக்கியக் காரணம் நாம் பற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது தான். மழைக்காலத்தில் பல் வலி ஏன் அதிகமாகிறது?, அதற்க்கான தீர்வு என்ன? என்று இப்பதிவில் காண்போம்.
மழைக்காலங்களில் அதிகமாக பல் வலி வர காரணம் :
பொதுவாக மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஆகையால் பற்களில் நீர் தேங்கி பல் வலியை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த காலங்களில் காற்று அழுத்த மாறுபாடுக் காரணமாக பற்களில் அழுத்தம் ஏற்பட்டு பல் வலியை ஏற்படுத்த கூடும். அதோடு மழைக்காலங்களில் பாக்டீரியா வளர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கும். இதனால், பற்களில் தொற்று ஏற்பட்டு பல் வலியை அதிகமாக உண்டாக்கும். மேலும், பற்களின் அழுத்தம் மழைக்காலங்களில் ஏற்படும் போது பல் வலியை மிகுதியாக உண்டாக்கும்.
இதையும் படிங்க: இந்த பிரச்சனை உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிட கூடாது.! ஏன் தெரியுமா.?!
பல் வலியை சரி செய்ய தீர்வுகள் :
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது பற்களை சுத்தம் செய்யுங்கள். மேலும், பற்களை பாக்டீரியா தொற்று ஏற்படாமல் எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்று மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. பல் வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் தற்காலிகமாக பல் வலி குறையை வாய்ப்பு உள்ளது.
மேலும், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில், கிராம்பு 4 சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, இந்த கிராம்பு தண்ணீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு தற்காலிகமாக பல் வலியை குறைக்கலாம். ஆனால், பல் வலி மிகுதியாக இருக்கும் போது மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். ஏனெனில், ஒரு பல் பாதிக்கப்பட்டு அதை நாம் சரியாக கவனிக்கவில்லை என்றால் அது அருகில் இருக்கும் பற்களையும் பாதிப்படைய செய்யும். ஆகையால், பல் வலிக்கு முழுமையானத் தீர்வை மருத்துவரிடம் பெறுவது நல்லது.
இதையும் படிங்க: குளிர்காலத்தில், இந்த உணவை எல்லாம் தொட்டுக் கூட பார்க்கக் கூடாது.! மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!