டெங்குவுக்கு எமனாகும் பாகற்காய்.. ஆனா, சாப்பிடும் முன் இதை மறந்துடாதீங்க.!
டெங்குவுக்கு எமனாகும் பாகற்காய்.. ஆனா, சாப்பிடும் முன் இதை மறந்துடாதீங்க.!
சமீபத்திய ஆய்வு
சமீபத்தில் ஆசிய பசுபிக் ஜர்னல் ஆஃப் டிராபிக்கல் பயோ மெடிசின் வெளியிட்டு இருக்கும் ஒரு ஆய்வில் கசப்பு தன்மை நிறைந்த பாகற்காய் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் பண்புகளை உள்ளடக்கி இருப்பது தெரியவந்துள்ளது. டெங்கு போன்ற பல்வேறு வைரஸ்களின் தாக்குதல்களில் இருந்து பாகற்காய் நம்மை காக்கிறது. இது நேரடி சிகிச்சை இல்லை என்றாலும் டெங்கு வைரஸுக்கு எதிராக போராடும் தன்மையை நம் உடலில் உருவாக்குகிறது.
டெங்குவுக்கு எமனாகும் பாகற்காய்
டெங்கு நோயில் இருந்து குணமடைய ஆரம்பித்து இருப்பவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் திறன் இந்த பாகற்காய்க்கு இருக்கிறதாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள பாகற்காய் அடிக்கடி நமது உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் பயன்களை நாம் பெறலாம்.
இதையும் படிங்க: தேங்காய் எண்ணெய் கொண்டு டெங்குவை விரட்டலாமா.? சித்த மருத்துவம் சொல்வதென்ன.?!
கசப்பு தன்மை என்று பலரும் அதை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆனால், நம் உயிரை காப்பாற்றக்கூடிய அளவிற்கு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
முக்கிய குறிப்பு
பாகற்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய தன்மை கொண்டதுதான். ஆனால், டெங்குவுக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் வெறும் பாகற்காயை மட்டும் சாப்பிட்டு சரி செய்து விடலாம் என்ற எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும்போதே மருத்துவரிடம் கேட்டுவிட்டு பாகற்காயை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் விரைவில் டெங்குவிலிருந்து மீளலாம்.
சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு
பாகற்காய் பல்வேறு நன்மைகளை கொடுக்கும். ஆனால், இது அனைவருக்கும் பொருந்தாது. ரத்த சர்க்கரை குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பாகற்காயை எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரை கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது ரத்த சர்க்கரை அளவை வேகமாக குறைக்கும் தன்மை கொண்டது.
பெண்களின் கவனத்திற்கு
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தங்கள் உணவில் பாகற்காயை சேர்த்துக் கொள்வதற்கு முன் எச்சரிக்கையாக மருத்துவரிடம் அனுமதி கேட்டுக்கொள்ள வேண்டும். அவர்களது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு மற்றும் இதர பரிசோதனைகளுக்கு பின் தான் அவர்கள் பாகற்காயை சாப்பிடலாமா என்பதை மருத்துவர்கள் கூறுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: இவர்கள் எல்லாம் வெந்தயத்தை சாப்பிட்டால் அவ்வளவு தான்.! உஷார்.!