காதில் சீல் வடிகிறதா? மக்களே கவனம் தேவை.!
காதில் சீல் வடிகிறதா? மக்களே கவனம் தேவை.!
குளிர்காலத்தில் பலரும் காதில் சீல் வடிவது தொடர்பான பிரச்சனை இருக்கும். பொதுவாக காதுகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக காதில் சீல் வடிதல், கடும் வலி, காது வீங்குதல் பிரச்சனைகள் ஏற்படும். இது வயது வித்தியாசமின்றி ஏற்படும் பிரச்சனை ஆகும். காதில் அழுக்கு நீர் போல வெளியேறுதல், மஞ்சள், பச்சை நிறத்தில் சீல் வடிதல், இயற்கையாக ஊறும் மெழுகு அதிகம் வெளியேரில், ரத்தம் வடிதல் போன்றவை காதுகளில் இருக்கும் காயம் அல்லது நோற்றுத்தொற்று தொடர்பான பிரச்சனையை உறுதி செய்கிறது.
நோய்த்தொற்றாக இருக்கலாம்
பாக்டீரியா, வைரஸ் கிருமி காரணமாக காதில் ஏற்படும் பிரச்சனையால், சீல் திரவம் வெளியேறும். இது காது பகுதியில் ஏற்பட்டுள்ள நோயை உறுதி செய்கிறது. குழந்தைக்கு சீல் வடிந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது நல்லது. நோயின் காரணமாக காது ஜவ்வு பகுதியில் சீல் வடிந்து அதிகமாகி, ஒருகட்டத்தில் ஜவ்வு வெளியேறவும் செய்யலாம்.
இதையும் படிங்க: அசைவ உணவுடன் இதை சாப்பிடுறீங்களா? உசுரே போயிரும்.. உஷார் மக்கா.!
மருத்துவரை சந்திப்பது நல்லது
வெங்காயத்தின் மேல்தொலைவிட மென்மையான படிவம் கொண்ட காது 1 செமீ விட்டம் கொண்டது ஆகும். இதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். காதில் சீல் வடிந்தால் உடனடியாக தானாக சுத்தம் செய்கிறேன் முயற்சி எடுக்க கூடாது. மருத்துவரை சந்தித்து உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: வாத பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் பேரிக்காய்; மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!