தமிழிசை சவுந்தராஜனுக்கு பாஜக தலைவர் பகிரங்க கண்டனம்; மேடையிலேயே நடந்த சம்பவம்.!
தமிழிசை சவுந்தராஜனுக்கு பாஜக தலைவர் பகிரங்க கண்டனம்; மேடையிலேயே நடந்த சம்பவம்.!
மக்களவை தேர்தல் 2024 நிறைவுபெற்ற பின்னர், கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தலைவர் அண்ணாமலை - முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கோவை மக்களவை தொகுதி அதிமுக தோல்வி குறித்து எஸ்.பி வேலுமணி அளித்த பேட்டிக்கு அண்ணாமலை அளித்த பதிலில், தமிழிசை - அண்ணாமலை இடையே முரண்பாடு ஏற்பட்டது.
கருத்து முரண்
இதுதொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, அண்ணாமலையும் இனி தான் கட்சி அலுவலகத்தில் மட்டுமே செய்தியாளர்களை சந்திப்பேன். வேறெங்கும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறாது என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று காலை ஆந்திர மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் பதவியேற்பு விழா கன்னவரம் நகரில் நடைபெற்றது.
இதையும் படிங்க: #Breaking: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு?..!
பதவியேற்பு விழாவில் கண்டனம்
இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அங்கு முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசையும் கலந்துகொண்டு இருந்தார். அவர் அமித்ஷா மற்றும் வெங்கையா நாயுடுவுக்கு வணக்கம் வைத்தார்.
ஆவேச முகத்துடன் அறிவுரை
அச்சமயம், தமிழிசையை அழைத்த அமித் ஷா, கோபமடைந்த முகத்துடன் கடுமையாக எதோ கண்டனம் தெரிவித்தார். இதனைக்கேட்ட தமிழிசை அவரிடம் சரி என்று பேசியபடி அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகவே, அண்ணாமலை - தமிழிசை விவகாரம் குறித்து அமித் ஷா பேசி கண்டித்து இருக்க வேண்டும் என பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், உண்மையில் எதற்கு இந்த கண்டிப்பு என அவரால் மௌனம் கலைத்தாலே இப்பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்.. பாஜகவுக்கு அதிர்ச்சி.!