20 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து; 18 பேர் பரிதாப பலி.!
20 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து; 18 பேர் பரிதாப பலி.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவர்தா பகுதியை சேர்ந்த பழங்குடியின சமூக மக்கள் 30 பேர் வனப்பகுதியில் டெண்டு எனப்படும் இலைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்
பின் இவர்கள் அனைவரும் மினி சரக்கு வேனில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அச்சமயம திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பக்பானி பகுதியில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு ஆடை வாங்கிவரும்போது சோகம்; கார் - லாரி மோதி 2 குழந்தைகள், மணமகன் உட்பட 5 பேர் பரிதாப பலி.!
விபத்தில் சிக்கிய மக்கள் மீட்பு
விபத்தில் சிக்கிய மக்கள் அனைவரும் உயிருக்காக பரிதவித்த நிலையில், தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
18 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு
தற்போது வரை விபத்தில் உயிரிழந்த 18 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: மச்சா 160 ல போடா.. நொடியில் பறிபோன 2 உயிர்.. லைவ் வீடியோவில் அதிர்ச்சி காட்சிகள்.!