Watch: செல்போனில் ஆர்வமாக பேச்சு; கைக்குழந்தையுடன் பாதாள சாக்கடையில் விழுந்த பெண்.!
Watch: செல்போனில் ஆர்வமாக பேச்சு; கைக்குழந்தையுடன் பாதாள சாக்கடையில் விழுந்த பெண்.!

சாலைகளில் நாம் செல்லும்போது கவனம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் பதிவு வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபத் பகுதியில் வசித்து வரும் இளம்பெண், சம்பவத்தன்று தனது 9 மாத கைக்குழந்தையுடன் போனில் பேசியவாறு நடைபாதையில் வந்துகொண்டு இருந்தார்.
அப்போது, நடைபாதையின் நடுவே விளம்பர பதாகை ஒன்று இருந்தது. அதற்கு அடுத்தபடியே பாதாள சாக்கடை ஒன்று அலட்சியமாக திறந்து கிடந்தது.
இதையும் படிங்க: பள்ளி அறையில் நடந்த பலான வேலை.. தலைமை ஆசிரியர் - பெண் ஆசிரியை நெருக்கம்.. அதிர்ச்சி காட்சிகள் லீக்.!
கவனம் தேவை
பெண்ணும் கைக்குழந்தையுடன் செல்போனில் பேசியவாறு நடைபாதையை கவனிக்காமல் சென்ற நிலையில், திடீரென திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்தார்.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து பெண் மற்றும் கைக்குழந்தையை பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக இருவரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இதையும் படிங்க: நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி அத்துமீறல்; அனுதினமும் நடந்த பதறவைக்கும் கொடுமை.!