ரோஸ் கலர் ரிப்பன் ஏன் இருக்கு? அடிக்கல் நாட்டு விழாவில் அப்பாவியை சரமாரியாக தாக்கிய எம்.எல்.ஏ.!
ரோஸ் கலர் ரிப்பன் ஏன் இருக்கு? அடிக்கல் நாட்டு விழாவில் அப்பாவியை சரமாரியாக தாக்கிய எம்.எல்.ஏ.!

அசாம் மாநிலத்தில் உள்ள பிளசிப்பூரா பகுதியில், வாழைப்பழ உற்பத்தி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெறாது. அப்போது, அனைத்திந்திய ஒருங்கிணைந்த முன்னேற்றம் (All India United Front) கட்சியின் எம்.எல்.எல் சம்சுல் ஹூடா கலந்துகொண்டார்.
அங்கு நிகழ்ச்சிக்காக ரோஸ் நிறத்தில் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது. எம்.எல்.ஏ சார்ந்த கட்சி கோடியில் சிவப்பு நிறம் இடம்பெற்று இருப்பதாக தெரியவருகிறது. இதனால் ரோஸ் நிறத்தில் எதற்காக ரிப்பன் கட்டப்பட்டது? என எம்.எல்.ஏ கேட்டார்.
அப்பாவியை தாக்கினார்
மேலும், அதனை கட்டியதாக அப்பாவி ஒருவர் மீது கடிந்துகொண்ட எம்.எல்.ஏ அவரை கன்னத்தில் பளார் என அடித்து, வாழைமரத்தை பிடுங்கி சேதப்படுத்தி தாக்கினார். இந்த விஷயம் குறித்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்.!
அன்றாடம் மக்கள் உழைத்து வாழும் பணத்தில், அவர்கள் கட்டும் வரியில் சம்பளப்பணம் வாங்கி, அப்பாவி வாக்கில் வெற்றி அடைந்தவர், பதவிக்கு போனதும் அதிகாரத்திமிரில் செயல்படும் அதிர்ச்சி சம்பவம் கண்டனத்தை குவித்துள்ளது.
இதையும் படிங்க: பாடியே கவுத்துட்டாரு.. விவாகரத்து கேட்டு வந்த மனைவியை பாடியே சமாதானப்படுத்திய கணவர்.!