#BigBreaking: அமைச்சரின் மருமகன்கள் மீது துப்பாக்கிசூடு; ஒருவர் பலி.!
#BigBreaking: அமைச்சரின் மருமகன்கள் மீது துப்பாக்கிசூடு; ஒருவர் பலி.!

மத்திய உள்துறை இணை அமைச்சரின் மருமகன்கள் இடையே நடந்த சண்டையில், ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பீகார் மாநிலத்தில் உள்ள ஜகதப்பூரில், மத்திய உள்துறை அமைச்சர் நித்தியானந்த் ராய் மருமகன்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே இன்று நடந்த தகராறில், ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் தங்களை சுட்டுக்கொண்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை
இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் கைகலப்பாகி, பின் அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஜெயஜீத் யாதவ், விகல் யாதவ் ஆகியோர் இடையே நடந்த சண்டையில், விகல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஜெயஜீத், அமைச்சரின் சகோதரி காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.
இதையும் படிங்க: போதை ஆசாமியால் சோகம்; தம்பதி விபத்தில் சிக்கி பலி..!
இவர்களில் ஜெயஜீத் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த விசயம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: வீடு-வீடாக ரேஷன் பொருட்கள் விநியோகம்; முதல்வர் உறுதி.!