சென்னை: படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட்.. வாழ்க்கையில் பெயிலியர்.. தந்தையை கொடூரமாக கொன்ற மகன்.. அதிரவைக்கும் சம்பவம்.!
சென்னை: படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட்.. வாழ்க்கையில் பெயிலியர்.. தந்தையை கொடூரமாக கொன்ற மகன்.. அதிரவைக்கும் சம்பவம்.!

சென்னையில் உள்ள நங்கநல்லூர், கங்கா நகரில் வசித்து வருபவர் முரளிதரன் (வயது 65). இவர் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். முரளியின் மனைவி ரோகிணி. ஹம்பதிகளுக்கு பிரசன்ன வெங்கடேசன் (30), ஆதித்ய நாராயணன் (28) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆதித்ய நாராயணன் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர் ஆவார். மனநலம் பாதிக்கப்பட்டு தற்போது இருக்கிறார்.
இதனால் வேலைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தவர், பணம் கேட்டு தந்தையிடம் தொந்தரவும் செய்து வந்துள்ளார். இதனால் தந்தை - மகன் வாக்குவாதம், தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனிடையே, 2 நாட்களுக்கு முன்னதாக தந்தை-மகன் இடையே வாக்குவாதம் உண்டாகவே, நாராயணன் தந்தையின் கழுத்தில் குத்திக்கொலை செய்தார்.
தந்தை கொலை
பின் இரத்தம் படிந்த உடையோடு தாயாரை அழைத்துக்கொண்டவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை நேரில் சந்திக்க சென்றுள்ளனர். இருவரும் பதற்றமாக இருப்பதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மாலிக் (வயது 25) சந்தேகம் அடைந்தார். மேலும், ஆதித்யா தனது சகோதரரை தொடர்பு கொண்டு அப்பாவை கொலை செய்துவிட்டேன். நீ இறுதி சடங்கு செய்துவிடு எனவும் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மகள் திருமணத்தில் தந்தைக்கு நேர்ந்த சம்பவத்தால், துடிதுடித்து உயிரிழப்பு.!
இதனால் அதிர்ந்துபோன ஆட்டோ ஓட்டுநர், நேரடியாக ஆட்டோவை திருவெல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு இயக்கினார். அங்கு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆதித்ய நாராயண உண்மையை ஒப்புக்கொண்டார். பின் ஆதம்பாக்கம் காவல்துறையினர், முரளிதரனின் வீட்டிற்கு நேரில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் ஆதித்ய நாராயணன் மற்றும் தாய் ரோகினி ஆகியோர் மனநல பாதிப்பு சிகிச்சை எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: காதலியை கொன்று, மொட்டை போட்ட காதலனின் விசித்திரமான செயல்.! கங்கையில் நீராடிய அதிர்ச்சி.!