காதலியை கொன்று, மொட்டை போட்ட காதலனின் விசித்திரமான செயல்.! கங்கையில் நீராடிய அதிர்ச்சி.!
காதலியை கொன்று, மொட்டை போட்ட காதலனின் விசித்திரமான செயல்.! கங்கையில் நீராடிய அதிர்ச்சி.!

காதலியை கொன்றுவிட்டு அவருக்காக மொட்டை போட்டுள்ள காதலனின் வினோத செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷால். இவர் அனன்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் சமீபத்தில் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதில் விஷாலுக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது.
இந்த நிலையில் காதலி என்றும் பாராமல் அணன்யாவை கொலை செய்து சூட் கேஸில் வைத்து தெருவில் வீசி விட்டு சென்றுள்ளார் விஷால். கொலை செய்த பின் தனக்கு பாவம் ஏற்பட்டுவிடும் என்று பயந்து போன விஷால் கடவுளிடம் மன்னிப்பு கேட்டு கங்கைக்குச் சென்று நீராடி இருக்கிறார்.
இதையும் படிங்க: அந்த காரணத்துக்காக மனைவியை துணியை அவிழ்த்து.. கணவனின் கொடூர செயல்.!
மேலும், அவர் தனது தலையை மொட்டை அடித்து பாரம்பரிய சடங்குகளை செய்திருக்கிறார். தற்போது, விஷால் போலீசில் பிடிபட்ட நிலையில் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியை கொன்றவுடன் நிறுத்தாமல் அவருக்காக மொட்டை போட்டுக்கொண்டு சடங்கு சம்பிரதாயங்களை செய்த இந்த காதலனின் விசித்திரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோவா ஹனிமூனில், நள்ளிரவு கணவன் செய்த செயல்.. போலீசிற்கு ஓடிச்சென்ற மனைவி.!