பெண்ணின் தங்க சங்கிலியை நொடியில் பறித்த திருடன்; ஜன்னலோரம் மெய்மறந்து செல்போன் பார்த்தபடி இருந்தவருக்கு விபரீதம்.!
பெண்ணின் தங்க சங்கிலியை நொடியில் பறித்த திருடன்; ஜன்னலோரம் மெய்மறந்து செல்போன் பார்த்தபடி இருந்தவருக்கு விபரீதம்.!
தங்க நகைகளை அணிந்து வெளியே செல்லும் பெண்கள், ஆண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருட்டு ஆசாமிகள் உலாவும் உலகில், நமது கவனமே மிகப்பெரிய இழப்பை தவிர்க்க உதவி செய்யும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் , மஹாலட்சுமி லே அவுட், சங்கர் நகர் பகுதியில் 40 வயது பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ஆசையாக கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் பரிதாப பலி; டெலிவரி ஊழியர், மனைவி உயிர் ஊசல்.!
மாலை நேரத்தில் விநாயகர் கோவிலுக்குள் இருந்தபடி பக்தர்கள் பாடல் பாடி பிரார்த்தனை மேற்கொண்டு இருந்தனர். அச்சமயம், 40 வயது பெண்மணி ஜன்னலுக்கு மிக அருகில் நாற்காலியில் செல்போன் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தார்.
நொடியில் சங்கிலி திருட்டு
அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை நோட்டமிட்ட திருடன், சற்றும் எதிர்பார்த்த விதமாக பெண்ணின் செயினை அறுத்துச் சென்றார். இதனால் அதிர்ந்துபோன பெண்மணி செயினை திருடன் அறுத்துச் சென்றதாக அலறினார்.
காவல் நிலையத்தில் புகார்
இதனால் அங்கு பரபரப்பு உண்டாகிய நிலையில், திருடன் ஓட்டம்பிடித்தான். பின் இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சுமார் 30 கிராம் மதிப்புள்ள தங்க செயின் பறித்துச் செல்லப்பட்டுள்ளது. பிரார்த்தனை பாடலை பக்தர் ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தபோது, செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான அதிர்ச்சி காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: "படியில் நிற்காதே" - அறிவுரை கூறிய நடத்துனருக்கு கத்திக்குத்து.. பேருந்தில் அதிர்ச்சி.. பதறியோடிய பயணிகள்.!