மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது.!
மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது.!
கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம், மைநாகப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சியாமா (வயது 27). இவர் சம்பவத்தன்று வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், பெண்ணின் கணவர் ராஜீவ், தனது மனைவி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறி இருக்கிறார்.
மனைவி கொலை
பின் ஷியாமாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் ஷியாமாவின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை நடந்தது உறுதியானது.
இதையும் படிங்க: பார்வை மாற்றுத்திறன் மனைவி வரதட்சணைக்காக கொலை; கணவர் வெறிச்செயல்.!
இதனையடுத்து, அவரை கொலை செய்தது யார்? கணவர் கொலை செய்து நாடகம் ஆடுகிறாரா? என அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கணவரே மனைவியை கொலை செய்தது அம்பலமானது.
இதையும் படிங்க: மாமனார் - மருமகள் கள்ளக்காதல்; உறவுக்கு தடையாக இருந்த மாமியார் கொடூர கொலை..!