மாமனார் - மருமகள் கள்ளக்காதல்; உறவுக்கு தடையாக இருந்த மாமியார் கொடூர கொலை..!
மாமனார் - மருமகள் கள்ளக்காதல்; உறவுக்கு தடையாக இருந்த மாமியார் கொடூர கொலை..!
50 வயதுடைய மாமியாரை, மருமகளும்-மாமியாரின் கணவரும் சேர்ந்து கள்ளக்காதல் உறவு காரணமாக அடித்துக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷிநகர் பகுதியில் வசித்து வருபவர் குர்கு யாதவ். இவரின் மனைவி கீதாதேவி (வயது 50). தம்பதிகளின் மகன் தீபக். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இதனிடையே, மாமனார் - மருமகள் இடையே முறைதவறிய உறவு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கள்ளக்காதல் ஜோடி இருவரும், தனிமையில் பல நேரங்களில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனிடையே, இருவரின் உல்லாசத்தின்போது மருமகளை தேடி வந்த பெண்மணி, தனது கணவர் - மருமகள் இடையே இருக்கும் உறவை கண்டறிந்துள்ளார்.
இதையும் படிங்க: லிவிங் டுகெதர் காதலி கொலை.. 9 மாதமாக பிரிட்ஜில் சடலம்.. மின்சார துண்டிப்பால் வீசிய துர்நாற்றம்.!!
செங்கல், மரக்கட்டையால் அடித்துக்கொலை
இருவரையும் கையும் களவுமாக அவர் பிடித்துவிட, மருமகளிடம் சண்டையிட்டு இருக்கிறார். மேலும், மகனிடம் இதுகுறித்து தெரிவிக்கப்போவதாக கண்டித்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த கள்ளக்காதல் ஜோடி, கீதா தேவியை கொலை செய்ய திட்டமிட்டு, அவரை செங்கல், மரக்கட்டை கொண்டு கொடூரமாக தாக்கி இருக்கின்றனர்.
பின் அவரின் சடலத்தை கழிவறையில் மறைத்து வைத்து, கீதா தேவியை காணவில்லை என நாடகம் அரங்கேறி இருக்கிறது. மேலும், கீதா தேவி வேறு யாருடனோ சென்று இருக்கலாம் என்றும் கிளப்பி விட்டுள்ளனர். அவர் இருசக்கர வாகனத்தில் மர்ம நபருடன் சென்றதாகவும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக தீபக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல்துறையினர் கீதா தேவியின் சடலத்தை கண்டுபிடிக்கவே, அவரின் உடலில் ரத்த காயம் இருந்ததால் கொலை செய்யப்பட்டது உறுதியாகி, குடும்பத்தினரிடம் தனித்தனியே விசாரணை நடந்தது. விசாரணையில் மாமனார் - மருமகள் உண்மையை ஒப்புக்கொள்ளவே, அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ரூ.5000 வரதட்சணைக்காக புதுமணப்பெண் அடித்தே கொலை; குடிகார மாப்பிள்ளை கொடூர செயல்.!