#Breaking: கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் மோதி 4 தமிழர்கள் மரணம்; துப்புரவு பணியின்போது சோகம்.!
#Breaking: கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் மோதி 4 தமிழர்கள் மரணம்; துப்புரவு பணியின்போது சோகம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம், சோரனூர், பாரதிபுழா ஆற்று இரயில் பாலத்தில், இரயில் தண்டவாளங்கள் மீது இருந்த குப்பையை எடுத்துக்கொண்டு இருந்தபோது, அவ்வழியே டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி பயணம் செய்த அதிவிரைவு இரயில் வந்தது.
இந்த இரயில் மோதியதில் சேலம் பகுதியில் வசித்து வந்த 2 பெண்கள் உட்பட 4 துப்புரவு பணியாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேரில் மூவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றில் விழுந்தவரின் சடலம் தேடப்படுகிறது.
இதையும் படிங்க: விடுதிக்குள் தீபாவளி பட்டாசுகளை ஏவி போர்; அதகளம் செய்த மாணவர்கள்.!
இந்த விசயம் குறித்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த நால்வரும் தமிழர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இரயில் தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியின்போது விபத்தில் சிக்கியதாக தெரியவருகிறது.
உயிரிழந்தவர்கள் லட்சுமணன், ராணி, வள்ளி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இரயில் மோதி உயிரிழந்தவர்களின் உடல் மீட்கப்படும் காட்சி
இதையும் படிங்க: மீன், கோழி, மருத்துவ கழிவுகளுடன் தமிழகம் வந்த கேரள லாரி.. அதிரடி காட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.!