விடுதிக்குள் தீபாவளி பட்டாசுகளை ஏவி போர்; அதகளம் செய்த மாணவர்கள்.!
விடுதிக்குள் தீபாவளி பட்டாசுகளை ஏவி போர்; அதகளம் செய்த மாணவர்கள்.!
2024ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை, நாளை உலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசின் சார்பில் அனைத்து மதத்தினரும் கொண்டாடும் தீபாவளி பண்டிகையும் முன்னெடுக்கப்பட்டது.
தீபாவளி கொண்டாட்டம்
இந்து சமய நம்பிக்கைப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வென்ற நாள் தீபாவளியாகவும், வடமாநிலத்தில் ஸ்ரீ ராமர் வனவாசம் முடிந்து தனது மனைவி சீதா தேவி, தம்பி இலக்குவன் ஆகியோருடன் நாடு திரும்பிய நாள் தீபாவளியாகவும் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: பட்டாசு விற்பனை கடையில் திடீர் தீவிபத்து; சிதறியோடிய மக்கள்.. பதறவைக்கும் காட்சிகள்.!
மனதில் இருக்கும் இருமை எனும் அவநம்பிக்கைகள் விலகி, அனைவர்க்கும் உதவி செய்து வாழக்கூடிய ஒளி தோன்றுதல் அல்லது அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துதல் தீபஒளி கொண்டாட்டத்திற்கு சரியானது.
பழைய வீடியோ தற்போது வைரல்
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டில் நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், ஐஐஐடி கோட்டையும் மாணவர்கள் இரண்டு குழுவாக பிரிந்து தீபாவளி பட்டாசுகளை வைத்து மாறி மாறி தாக்குதல் நடத்திக்கொண்டனர்.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மீன், கோழி, மருத்துவ கழிவுகளுடன் தமிழகம் வந்த கேரள லாரி.. அதிரடி காட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.!