தலைக்கு வந்தது துப்பட்டாவுடன் போனது - நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் காணொளி.!
தலைக்கு வந்தது துப்பட்டாவுடன் போனது - நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் காணொளி.!
கார் விபத்திற்குள்ளானதில், பெண் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவன்னதபுரம், பரஸாலா பகுதியில் சம்பவத்தன்று கார் ஒன்று வந்தது. இந்த கார் செங்கோவிலா பகுதியில் பயணித்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது.
இதனால் அதிவேகத்தில் பயணித்த கார், சாலையோரம் இருந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதி, உருண்டு நின்றது. காரில் பயணம் செய்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதையும் படிங்க: மலேசியாவிற்கு ஹனிமூன் சென்ற ஜோடி, பிணமாக திரும்பிய கொடூரம்.. கதறி துடிக்கும் உறவினர்கள்.!
நூலிழையில் உயிர்தப்பிய பெண்
இந்த சம்பவத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சாலையில் வந்தார். அவர் வாகனம் தறிகெட்டு வருவதை கண்டு ஒதுங்கிய நிலையில், நூலிழையில் உயிர் தப்பினார்.
அவர் ஒதுங்கியபோது, அவரின் கழுத்தில் இருந்த துப்பட்டா மட்டும் காரின் பக்கவாட்டு பகுதியில் சிக்கி இழுத்து செல்லப்பட்டது. இதனால் தலைக்கு வந்தது துப்பட்டாவுடன் சென்றது என பெண் ஆஸ்வாசம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்த காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. சாலைகளில் பயணம் செய்வோர், ஒவ்வொரு நொடியும் முடிந்தளவு சுதாரிப்புடன் பயணிப்பது நல்லது.
பதறவைக்கும் வீடியோ
இதையும் படிங்க: காய்கறி வியாபாரிகள் மீது தறிகெட்டு பாய்ந்த லாரி; 10 பேர் பரிதாப பலி., 20 பேர் படுகாயம்.!