மலேசியாவிற்கு ஹனிமூன் சென்ற ஜோடி, பிணமாக திரும்பிய கொடூரம்.. கதறி துடிக்கும் உறவினர்கள்.!
மலேசியாவிற்கு ஹனிமூன் சென்ற ஜோடி, பிணமாக திரும்பிய கொடூரம்.. கதறி துடிக்கும் உறவினர்கள்.!
மலேசியாவில் ஹனிமூன்
புதுமண தம்பதிகள் இருவர் ஹனிமூன் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது, விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த நிகில் எனும் 27 வயது இளைஞனுக்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி திருமணமாகியது. அனு என்ற 26 வயது பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் சேர்ந்து ஹனிமூனுகாக மலேசியா சென்றுள்ளனர்.
கார் விபத்து
தங்கள் ட்ரிப்பை முடித்துவிட்டு, இன்று காலை தான் அவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். தம்பதிகள் சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த மோசமான அசம்பாவிதம் நடந்துள்ளது. பத்தனம்திட்டா வழியாக அவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது சபரிமலை பக்தர்கள் வந்த பேருந்து காரில் மோதியுள்ளது.
இதையும் படிங்க: 17 வயது கர்ப்பிணி சிறுமி காய்ச்சலால் மரணம்.. 18 வயது இளைஞன் பகீர் வாக்குமூலம்.!
அப்பளமாக நொறுங்கிய கார்
இதனால், கார் படு மோசமாக நொறுங்கியது. இதில் காரில் இருந்த புதுமண தம்பதிகள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது பற்றி போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிர்ச்சியில் உறவினர்கள்
திருமணமாகி முழுதாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இந்த புதுமண தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாயமான இளம்பெண்ணின் உடல் ஆற்றில் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?.. பெற்றோர் கண்ணீர்.!