"என் மனைவி அதிகம் பேசுறா., விவாகரத்து கொடுங்க" - நீதிமன்றத்தில் கணவர் கோரிக்கை.!
என் மனைவி அதிகம் பேசுறா., விவாகரத்து கொடுங்க - நீதிமன்றத்தில் கணவர் கோரிக்கை.!
பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் மத்திய பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவனத்தில், நல்ல வேலையில் இருக்கிறார். இவரின் மனைவி சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தம்பதிகள் திருமண வாழ்க்கைக்குப் பின் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது 3 வயது, 6 மாத பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் அதிகம் பேசும் சுபாவம் கொண்டவர் என கூறினார்.
விவாகரத்து கேட்டு விண்ணப்பம்
இதனிடையே, மனைவி எப்போதும் பேசிக்கொண்டு இருப்பது தனக்கு வெறுப்பாக இருக்கிறது. அவர் எங்களிடம் எதுவும் பேசாமல் குழந்தைகளை கவனித்துக்கொண்டு, வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். இல்லையேல் விவாகரத்து கொடுங்கள் என கணவர் தரப்பில் அங்குள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துப்பட்டா இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. கோவில் வளாகத்தில் கலங்கவைக்கும் சோகம்.!
வினோதமான இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அரசுத்துறை அதிகாரிகள் இருதரப்புக்கும் ஆலோசனை வழங்கி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருட சென்ற இடத்தில், சிரிப்பலையை ஏற்படுத்திய திருடன்.. சிசிடிவி காட்சிகள் வைரல்.!