துப்பட்டா இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. கோவில் வளாகத்தில் கலங்கவைக்கும் சோகம்.!
துப்பட்டா இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; கோவில் வளாகத்தில் கலங்கவைக்கும் சோகம்.!
ஒரு நொடி கூட உறுதி இல்லாத நிலையில் தான் உலகமே உயிரை கையில் பிடித்து இயங்கி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில், மஹாகாளேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில், கோவில் பிரகாரத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அன்னதான மடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30 வயதுடைய இளம்பெண் ஒருவர், சமையல் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: திருட சென்ற இடத்தில், சிரிப்பலையை ஏற்படுத்திய திருடன்.. சிசிடிவி காட்சிகள் வைரல்.!
இயந்திரத்திற்குள் சிக்கி பலி
இன்று ரஜினி காந்தாரி என்ற பெண்மணி வழக்கம்போல பணியாற்றி வந்த நிலையில், அவரின் துப்பட்டா உணவு தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி இழுத்துள்ளது. இந்த சம்பவத்தில் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்ட பெண்மணி, நிகழ்விடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். உருளைக்கிழங்கை துண்டாக்கி மசிக்கும் இயந்திரத்திற்குள் அவர் விழுந்து பலியாகி இருக்கிறார்.
நிர்வாகம் இரங்கல்
பெண்மணி இயந்திரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்ததை கண்ட பணியாளர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள கோவில் நிர்வாகம் மற்றும் மாநில அரசு, அவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் குழந்தை பெற்ற 16 வயது சிறுமி; விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!